Category :அரசியல் | Clothing
பெட்டைக்குளம் செ.ம.காதர் மீரா சாகிபு மேல் நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா. சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார். . நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உறுமன்குளம் ஊராட்சி பெட்டைகுளம் செ.ம.காதர் மீரா சாகிபு மேல் நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு 67 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் களை வழங்கி பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர் மோசஸ் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக் குழு தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட கவுன்சிலர் ஆவரைகுளம் பாஸ்கர் உறுமன்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொன் இசக்கி பாண்டியன், திமுக நிர்வாகிகள் அமச்சியார், வடிவேல் முருகன், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், அன்பழகன் உறுமன்குளம் ஊராட்சி செயலர் ஜெயகண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Author: Arunachalaam | Date: 2025-12-17 13:59:41
Share this