Category :அரசியல் | Clothing
தூத்துக்குடி மாநகரின் குடிநீர் விநியோக பாதையான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிகளில் வரும் மின்சார பாதையான கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை 17. 12. 2025 புதன்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப் படுகிறது. ஆகவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் சி, ப்ரியங்கா தெரிவித்துள்ளார்கள்.
Author: Nanjil Kural | Date: 2025-12-16 10:51:45
Share this